14 Mar 2018

முத்தத் துயர்


முத்தத் துயர்
முத்தமிட்ட உன் எச்சில்
கடலாகிறது
அலைகளை அனுப்பி
ஆக்ரோஷமாக உறுமுகிறது
கரைகள் மேல்
வந்து வந்து மோதுவது போல்
கனவுகளில் மோதி
தூக்கத்தை உடைக்கிறது
முத்தமிடப்படாத முன் இரவுகளின்
பூரண அமைதி கேலி பேசுகிறது
இன்னொரு முத்தம்
வற்றிப் போய் கிடக்கிறது
தொலைதூர மேகங்கள்
அருகில் வர அடம் பிடிக்கின்றன
ஒரு முத்தத்திற்கான ஏக்கம்
பாலைவனம் போல்
விரிந்து கொண்டு போகிறது
கானல் தோற்றங்களைத் தந்தபடி.
*****

No comments:

Post a Comment

விவசாயம் ஏன் கழுத்தை இறுக்குகிறது?

விவசாயம் ஏன் கழுத்தை இறுக்குகிறது? எப்படி விவசாயம் வேண்டும் என்பதற்கு எனக்கு அண்மையில் பாடம் எடுத்தார் என் நண்பரின் நண்பர் என்று சொல்லிக் ...