14 Mar 2018

அது மட்டும் பிடித்தம்


அது மட்டும் பிடித்தம்
இரவில் அலையும்
பகலில் உறங்கும்
பூனைகளைப் பார்க்க
பிடித்தமாயிருக்கிறது
மற்றும்
இந்த உலகின்
அநேக ஜீவராசிகளில்
அது ஒன்றும் மட்டுமே
பிடித்தமாயிருக்கிறது
இரவுக் காவலாளிக்கு.
*****

No comments:

Post a Comment