தீவிர வரைபட விளக்கத் திட்டம்
இயற்கை வேளாண்மை குறித்த ஒரு வரைவுத் திட்டத்தை
உருவாக்குவது என்ற கனவு எஸ்.கே.வுக்கு நீண்ட நாளாக இருந்தது.
அவன் வசிக்கும் பகுதியில் 'மா' என்ற கணக்கில்
நிலம் வாங்குவது - விற்பது நிகழும். ஒரு மா என்பது நூறு குழி. ஒரு குழி என்பது 144
சதுர அடிகள்.
4 மா-வுக்கு உத்தேசமாக அவன் ஒரு செயல்திட்டத்தை
வடிமைத்தான்.
அதை கீழே இருக்கும் வரைபடத்தில் காணுங்கள்.
சற்றுக் கூடுதலாகப் பணம் கிடைத்து அதாவது
வங்கிக் கடன் வாய்க்கப்பெற்று (வேளாண்மைக்கு என்றால் வங்கிக் கடன் பைசா தேறாது என்பது
வேறு) 9 மா- என்றால் அதற்கான உத்தேச ஒரு செயல்திட்டத்தையும் அவன் வடிவமைத்தான். கனவு
காண்பதன் வசதி இதுதான். எப்படி வேண்டுமானாலும் எல்லையற்றுக் காணலாம்.
9 மா-வுக்கான செயல்திட்டமும் கீழே வரைபடத்தில்
இருக்கிறது காணுங்கள்.
அத்தோடு விட்டான் இல்லை எஸ்.கே.
அதில் மையமாகவோ அல்லது ஓரமாகவோ ஒரு குடில்
உருவாக்கிக் கொள்ளும் செயல்திட்டமும் அவனுக்கு இருந்தது.
அதையும் வரைபடத்தில் கீழே காணுங்கள்.
மொத்ததத்தில் மூன்று வரைபடங்கள்.
எஸ்.கே.வின் இம்மூன்று வரைபடங்களும் பூமியில்
வரையப்படும் போது இதை வாசிக்கும் நீங்கள் அனைவரும் எஸ்.கே.யின் இயற்கை வேளாண்மைப்
பண்ணையைக் காண அழைக்கப்படுவீர்கள்.
இப்போது வரைபடங்களைப் பார்த்து ஒருவாறாகக்
கற்பனை செய்து கொள்ளுங்கள். இவ்வரைபடங்களைக் கொண்டு தன் கற்பனையில் அமைத்திருக்கும்
வேளாண் அமைவிடம் மற்றும் குடிலிலும்தான் தற்போது எஸ்.கே. வசித்து வருகிறான். அதன்
முகவரியை மட்டும் தயவுசெய்து கேட்டு விடாதீர்கள்.
*****
No comments:
Post a Comment