மஞ்சள் முட்டையின் சிவப்புக் குஞ்சு
வருங்காலத்தின்
நிலக்கடலையை வாங்கி
பையில்
போட்டுக் கொண்டவன்
கடந்த
கால கடலையொன்று
சொத்தையாகப்
போனதை எண்ணி
கவலைப்பட்டான்
சரியாக
வறுபடாத
நிகழ்காலக்
கடலையைக் கையில் எடுத்தவன்
வாயில்
போடுவதா, பையில் போடுவதா என
யோசித்துக்
கொண்டிருந்தான்
கடந்த
கால கடலையாவேனோ
வருங்கால
கடலையாவேனோ என
விழித்து
விழித்து
மஞ்சள்
முட்டையிலிருந்து வெளிவந்த
சிவப்புக்
குஞ்சைப் போல்
அவனையே
வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது
நிகழ்காலக்
கடலை.
*****
No comments:
Post a Comment