கனவுகளின் தண்டல்காரர்கள்
நீ
எப்படி வித்தியாசமாக
கனவு
காண முடியும்?
உன்
கனவுகளை வெட்டுகிறேன்,
உன்
கனவுகளைக் கொல்கிறேன் என்று
கூச்சலிட்டான்.
என்
கனவுகளுக்கு நான் எவ்விதத்திலும் பொறுப்பல்ல
ஆனாலும்
கனவு கண்டு கொண்டிருக்கிறேன்
என்றேன்
நான்.
இனி
நீ கனவு காணக் கூடாது என்றான்.
மறுபடியும்
நான் பொறுமையாக
நானாக
கனவு காண்பதில்லை
தானாக
காண்கிறது என்றேன்.
அது
எப்படித் தானாகக் காணும் என்றவனுக்கு
அது
எப்படித் தானாக உனக்கு என்
கனவுகளைக்
கொல்லத் தோன்றும் என்றேன்.
அவன்
பதில் சொல்லவில்லை.
கண்களில்
வன்மம் தெறிக்கிறது.
*****
No comments:
Post a Comment