காதல் பிசாசுகளின் குறும்புகள்
தண்டவாளத்தில்
போன ரயிலைப்
பெயர்த்தெடுத்து
இதயத்தில் ஓட விட்டாய்
பொறுத்துக்
கொண்டேன்
கப்பலைத்
தூக்கி வந்து
வாயில்
செருகி உமிழ்நீரில் செலுத்து என்றாய்
தாங்கிக்
கொண்டேன்
விமானத்தை
ஓட்டி வந்து
கண்களுக்குள்
மோத விட்டாய்
சகித்துக்
கொண்டேன்
செலுத்து
வாகனம் இல்லையென்று
செயற்கைக்
கொள்கள் சிலவற்றை
நெஞ்சோடு
கட்டி
விரல்களைத்
திரிகளாக்கிப் பற்ற வைத்தாய்
விதியென்று
ஏற்றுக் கொண்டேன்
பிரியமான
ஏவுகணைகள் என்று
காதுகளுள்
செலுத்தி கைதட்டி ரசித்தாய்
காதலே
காப்பாற்று என மண்டியிட்டுக் கொண்டேன்
பத்திரம்
என்று அணுகுண்டுகளைப் பொறுக்கி வந்து
உள்ளங்கைக்குள்
வைத்து அழுத்திப் போனாய்
தண்டனைகள்
முடிவுக்கு வருவதாக என வேண்டிக் கொண்டேன்
காதல்
பிசாசுகளின் குறும்புகள் அட்டகாசமானவை
கண்ணி
வெடிப் பூக்கள் மலர்வதும்
பூக்கள்
காலக் குண்டுகளாய் வெடித்துச் சிதறுவதும்
காதல்
பச்சோந்தியே என்று திட்டிய வாய்
மறுநாள்
கெஞ்சிக் கொண்டிருக்கும்
காதலை
எதுவுமென்று சொல்லி விடாத
வார்த்தைகளோடு
தப்பித்து ஓடி விடு
என் முடமான நாக்கே.
*****
No comments:
Post a Comment