பலிபீடத்தில் அமர்ந்து கொள்ளும் கழுத்துகள்
வெட்டி
அடுக்கப்படுகின்றன
உறுப்புகள்
ஒவ்வொன்றாக
வெட்டப்பட்ட
கைகள் கைகூப்பியிருந்தன
கால்கள்
மண்டியிட்டு இருந்தன
கண்களில்
கண்ணீர் தழும்பியிருந்தது
இதயத்திலிருந்து
பயம் வழிந்தோடியது
மூளை
முழுதும் துயரத்தின் எழுத்துகள்
வாய்
பினாற்றிக் கொண்டிருந்தது
காதுகள்
எதையோ ஆவலோடு
கேட்டபடி
இருந்தன
கடைசி
வரை கடவுள் வரவில்லை
என்ற
செய்தி சொல்லப்பட்டதும்
சிறு
விசும்பலோ மறுப்போ ஏதுமின்றி
கழுத்துகள்
பலிபீடத்தில் அமர்ந்து கொண்டன
*****
No comments:
Post a Comment