4 Mar 2018

சித்திரகுப்தனின் மிகை மதிப்பு


சித்திரகுப்தனின் மிகை மதிப்பு
நீண்ட பயணத்தில் துணை வரும் செருப்பு
அறுந்த போகும் போது
கழற்றி வீசத்தான் வேண்டும்
அறுந்தது ஒரு செருப்பு
மற்றொரு செருப்புக்கும் வீசுதலே விதி
புதிய செருப்பு காலில் பொருந்தி
தேய்ந்து அழியும்
நகரின் முக்கிய வளாகத்தில்
மின்னொளிகள் ஜொலிக்க வீற்றிருக்கும்
செருப்புகள் மெரினா கூட்டத்தின்
ஜோடிகள் போல
பிரிந்த பின் எந்தப் பயனும் இல
அறுந்த செருப்பைத் தைத்துத் தரும்
ஒரு தொழிலாளியைப் பார்க்கையில்
சித்திரகுப்தன் தன் ஏட்டில்
நீட்டித்து எழுதி அனுமதித்துக் கொள்கிறான்
அதன் ஆயுட்காலத்தைச் சற்றுக் கூடுதலாய்
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...