நடுமண்டை வழி வெளியேறும் தண்டனைகள்
பித்தேறி
உன்மத்தமாய்த்
திரியும்
பொழுதுகளில்
காதலின்
தண்டனைகள் வந்தடைகின்றன
குரூரம்
அதன் கைகளாக இருக்கிறது
வன்மம்
அதன் ஆயுதமாக இருக்கிறது
சிந்தும்
அழுகைத் துளிகளைப் பார்த்து
கைதட்டி
ரசிக்கிறது
பரிதாபப்படுவது
போல
என்
பின்னிரவு தூக்கத்தை
உறிஞ்சிக்
கொண்டு
நடுமண்டை
வழியாக வெளியேறும் போது
இதயத்தில்
வலி எடுக்கிறது
சிவப்பு
ரோஜாக்கள் சிந்திக் கிடப்பது போல
ரத்தம்
பரவிக் கிடக்கிறது
நினைவுவெளி
எங்கும்
இது
எதுவும் புரியாமல்
திட்டி
விட்டுப் போகிறது சனக் கூட்டம்
*****
No comments:
Post a Comment