கனவில் விளையாடும் பலூன்
நூல்
கட்டி கைகளில் இருக்கும்
பாப்பாவின்
பலூன்
அவளைப்
பறக்கச் செய்கிறது
பந்தாய்
மாறி குத்தச் சொல்கிறது
உதை
விடக் கெஞ்சுகிறது
தேய்த்துத்
தேய்த்து
சத்தம்
எழுப்ப இரைஞ்சுகிறது
அழுத்திப்
பிசைந்து கொடுக்க கேட்கிறது
வேகமாய்
அடித்தக் காற்றில்
ஆகாயமார்க்கமாய்ச்
அழ வைத்துச் சென்ற அது
நடுநிசிப்
பொழுதில் அமைதியாய் உறங்கும்
பாப்பாவின்
கனவில் வந்து
விளையாடிக்
கொண்டிருக்கிறது
*****
No comments:
Post a Comment