27 Mar 2018

நன்றி என் சமூகமே!


நன்றி என் சமூகமே!
ஆற்றங்கரையில் பிறந்தவனுக்கு
நீச்சல் தெரியாது
தயவுசெய்து நம்புங்கள்
இந்தச் சாக்கடை நதியின் அருகில்
மூக்கைப் பிடித்துக் கொண்டு செல்லவும்
நான் அனுமதிக்கப்பட்டதில்லை
தண்ணீர் கருப்பு என்று சொன்னால்
தலையில் அடித்துச் சத்தியம் செய்தாலும்
நம்ப மாட்டேன்
பார்க்கும் தண்ணீர் அப்படித்தான் இருக்கிறது
என்று சொன்னால்
கண்ணால் காண்பதும் பொய்யென்று
எனக்குக் கற்பிக்கப்பட்டு இருக்கிறது
ஊழிப் பெருவெள்ளம் ஒன்று வரும் போது
உயிர் காக்கும் படகுகள்
மிதக்க விடப்பட்டு இருக்கும் என்று
உறுதியாக நம்புகிறேன்
எனக்கு நீச்சல் தெரியாமல் போனதற்கும்
எங்கள் ஊர் ஆறும், குளமும்
சாக்கடையாக்கப்பட்டதற்கும்
நீச்சல் குளம் கட்டி கோர்ஸ் ஆரம்பிக்கப் பட்டதற்கும்
தொடர்பு இருக்கும் என்று
எங்கள் வரலாறு பேசாது என்று
இதனால் சகலமானவர்களுக்கும் உறுதியளித்து
கையொப்பம் செய்கிறேன்
நன்றி என் சமூகமே
போதுமென்று இத்தோடு
என் வாயைப் பொத்திக் கொள்ள சொன்னதற்கு.
*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...