28 Mar 2018

பணயம் வைக்கும் வாழ்க்கை


பணயம் வைக்கும் வாழ்க்கை
நிறைவேறாத ஆசைகளை
பெரிய ஆசைகளாக வைத்துள்ளாய்
பிதுங்கி வழியும் உன் சட்டைப் பைக்குள்
அவைகள் உன்னைச் சோர்ந்து விழச் செய்யும் போது
தடுமாறி விழுகிறாய்
நீ விழுந்ததை உன் மனக்கண்ணில் பார்த்து
நீயே கைதட்டிச் சிரித்து ரசித்துக் கொள்கிறாய்
அதை நிகழ்த்தி விட்டால்
பெரிய சாதனையாளன் என ஊர் மெச்சும் என்று
வீரவசனம் பேசிக் கொள்கிறாய்
உன் தன்னம்பிக்கை வற்றியதாகத் தெரியவில்லை
அதில் பணயம் வைக்க
அனுபவித்து ரசிக்க வேண்டிய
உன் வாழ்க்கைதானா கிடைத்தது உனக்கு?
*****

No comments:

Post a Comment

கதைக்கும் கதைகள்

கதைக்கும் கதைகள் எது ஒரு கதை என்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோணம் இருக்கிறது கோணத்தை அளந்து கொண்டிருந்தால் கதை சொல்ல முடியாது ...