3 Mar 2018

நரகவாசியின் ஓட்டம்

நரகவாசியின் ஓட்டம்
சதுர அடிக்கு இவ்வளவு என்று
கொடுக்கத் திராணியிருப்பவன்
நகரத்தில் வாழ அனுமதிக்கப்படுகிறான்
மற்றவர்கள் நகரத்தின் ஓரத்தே இருக்கும்
நரகத்தில் வாழ அனுமதிக்கப்படுகிறார்கள்
'நரகம் என்றால் சாக்கடை ஆறு
நாற்றம் வீசும்
கழிவுகளும் குப்பைகளும்
குடலைப் புரட்டும்
நல்ல தண்ணி நாக்கில் படாது
நோயில் வீழ்த்தும் உணவு
வாயில் விழும்' என்பதைக் கேட்டதும்
எண்ணெய்க் கொப்பரையில் வறுப்பதையும்
ஊசிப் படுக்கையில் படுக்க வைப்பதையும்
இன்ன பிற அணுஅணுவான சித்தரவதைகளையும்
நரக வேதனை என்று சொன்ன நரகவாசி
நகர்ந்துப் போனான்.

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...