23 Mar 2018

நம்பினால் நம்பு


நம்பினால் நம்பு
கல் தடுக்கி தப்பித்தவரும் உண்டு
புல் தடுக்கிச் செத்தவரும் உண்டு
நம்புகின்ற மாதிரி இல்லையென்பாய்
ஆழ்கடலில் விழுந்து பிழைத்தவரும் உண்டு
குளியல் தொட்டியில் விழுந்து செத்தவரும் உண்டு
*****
யுவர் குட் நேம்
ராங் நம்பர் என்றவர்
எதற்காகப்
பெயர் கேட்டார்
*****
இட மாற்றம்
ஒரு குவார்டடர்
ஒரு ஆப் பாயில்
ஒரு லெக் பீஸ்
ஆர்டர் கொடுத்து விட்டு
அமர்ந்தார்
சர்வர்
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...