23 Mar 2018

செங்காந்தள் அறிவுத் திருவிழா - 3


செங்காந்தள் அறிவுத் திருவிழா - 3
            செங்காந்தளின் அறிவுத் திருவிழா எனும் மாணவர்களை நோக்கிய புத்தகக் கண்காட்சி இன்று 23.03.2018 (வெள்ளி) அன்று திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஒன்றியம், பெரியகொத்தூர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.
            முதன் முதலாக பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தோடு இணைந்து நடத்தப்பட்டப் புத்தகக் கண்காட்சி இதுவாகும். கூட்டத்துக்கு வருகை தந்திருந்த பெற்றோர்கள் புத்தகங்களைப் பார்வையிட்டு, தங்கள் பிள்ளைகள் புத்தகங்களைப் பார்வையிடுவதைப் பெருமகிழ்வுடன் பார்வையிட்டனர்.
            ஒவ்வொரு மாணவரையும் ஒரு புத்தகத்துக்காகவது முதலாளி ஆக்க வேண்டும் என்ற நோக்கோடு தொடங்கப்பட்ட இவ்வறிவுத் திருவிழாவில் புத்தகங்களைக் கண்ட மாணவர்கள் அள்ளி எடுத்து உச்சி முகந்தனர்.
            தாங்கள் விரும்பி எடுத்துக் கொண்ட புத்தகங்களை நெஞ்சோடு அணைத்துக் கொண்ட மாணவச் செல்வங்கள் நூலுக்கானத் தொகையைப் பத்து நாட்கள் கால அவகாசம் கொடுத்தால் கொடுத்து விடுவதாக் கூற, அதை செங்காந்தள் முழு மனதோடு ஏற்றுக் கொண்டு அப்புத்தகங்களின் முதலாளிகளாக அம்மாணவர்களை ஆக்கியது.
            ஒரு லட்சம் புத்தகங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது செங்காந்தள் அறிவுத் திருவிழாவின் இலக்கு. அவ்விலக்கின் படி 98,724 நூல்களைக் கொண்டு சேர்க்க வேண்டிய நிலையில், இவ்வறிவுத் திருவிழாவில் மாணவச் செல்வங்கள் 151 புத்தகங்களுக்கு முதலாளி ஆகியிருக்கின்றனர். ஆக 98,724 - 151 = 98,573. இன்னும் 98,573 புத்தகங்களை மாணவர்களின் கரங்களில் கொண்டு சேர்க்க வேண்டும்.
            புத்தகங்களைப் பிஞ்சுக் கரங்களில் கொண்டு சேர்க்க கரம் கோர்ப்போம்.
            இளை தலைமுறையின் அறிவு தாகம் தீர்ப்போம்.
*****

No comments:

Post a Comment

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்!

நீங்களே தீர்மானிக்கிறீர்கள்! நீங்களே அனுபவிக்கிறீர்கள்! வாகனம் ஓட்டும் போது நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வீர்கள் எதையும் நீங்கள் அதன...