22 Mar 2018

வாடா வா - போடா போ வாழ்க்கை இது!


வாடா வா - போடா போ வாழ்க்கை இது!
என்னடா வாழ்க்கை இது!
ஒரு கட்சி மூன்றாக உடைகிறது
சிதறு தேங்காய் ஒன்று இருபதுக்கு விற்கிறது
ஒரு ஓட்டுக்கு மூன்று ஆண்டவர்களைப் பார்க்கிறாய்
சிறப்பு தரிசனத்துக்கு ஒரு முழு
ரெண்டாயிரம் நோட்டு தேவைப்படுகிறது
பசுக்கள் பாதுகாக்கப்படுகின்றன
குழந்தைகள் மரணம் அடைகின்றன
ஊழலுக்குச் சாவுமணி அடித்து விட்டதாகப்
பேசிக் கொள்கிறார்கள்
எம்.எல்.ஏ.க்கள் ஓட்டை மாற்றிப் போட
சிட்டுகள் போல் துட்டுகள் பறப்பதாக சொல்கிறார்கள்
பழைய கரன்சிக்களை எச்சரிக்கையாக
மாற்றி விட்டார்கள்
கரும்பட்டைக் கோடு போல
ஒரு புதிய வரி புலப்படுகிறது
தோசை விலை ஏறி விட்டது
பசியால் பற்றி எரியும் வயிறுக்கு
ஒன்று போதுமானதாக இல்லை
வரி ஏய்ப்புச் சாப்பிடுவதா
மரியாதையாக எழுந்து செல்
பனிமலையில் காவல் காக்கும் வீரர்களும்
அட்டாங்க யோகம் செய்யும் யோகிகளும்
தின்றா வயிறு வளர்க்கிறார்கள்
மென்மேலும் மெலிந்து போய்
எமர்ஜென்ஸி வார்டில் அனுமதிக்கப்பட்டு
ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல் செத்துப் போ
தேசத்தைக் காத்தல் செய்
போடா போ!
*****

No comments:

Post a Comment

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) - விகடபாரதி

மூன்று லட்சியங்கள்! (சிறுகதை) -          விகடபாரதி போக்குவரத்தில் நீந்தி வருவது சாகசம். சில நேரங்களில் எதிர்நீச்சல் போடுவது போல இருக்கிற...