ப்ரியா இரு மனுஷா!
உன்
கவலைகள் உன்னை
நிம்மதியாக
உறங்க விடட்டும்
இன்ஸ்டால்மென்ட்
நினைவுகள்
இயல்பாக
இருக்க விட்டால் பரவாயில்லை
இ.எம்.ஐ.
கனவுகளில் வந்து
அச்சுறுத்தாமல்
இருக்க வேண்டும்
அபார்ட்மென்ட்,
கார், பீட்சா இலட்சியங்கள்
நசுக்காமல்
இருந்தால் தேவலாம்
ஒன்றுக்கு
நான்காய் காதல் தோல்விகள்
தற்கொலைக்குத்
தூண்டாமல் இருந்தால் நல்லது
ப்ரியா
இரு மனுஷா
எளிமையான
வாழ்வை நோக்கி
உன்
மனம் நகர்ந்து கொண்டிருக்கிறது
அடித்துச்
சொல்கிறேன்
ப்ரியா
இரு மனுஷா!
*****
No comments:
Post a Comment