2 Mar 2018

அட்டையை முடிந்து வை

அட்டையை முடிந்து வை
வேண்டுதலுக்காக முடிந்த காசு
மஞ்சள் துணியில் இருக்கிறது
உண்டியலில் போடச் சொல்கிறாள் அம்மா
உண்டியலிலிருந்து எடுப்பவர்
எந்த நோயைத் தீர்த்த நாணயம்
அது என்று யோசித்துப் பார்ப்பாரா?
அந்த நாணயம் கை மாறி கை மாறி
நோய் தீர்த்த நாணயம் என்று
அறியப்படாமல் போய்க் கொண்டே இருக்குமா?
வீட்டில் ஒருவர் நோயில் படுக்கும் போது
ஒரு நாணயம் முடியப்பட்டு விடும்
பழைய அம்மாக்கள்  இருக்கும் வரை
நோய் தீர்த்த நாணயங்கள்
காப்பீடு எனும் வடிவமெடுத்து
அட்டைகளாக உருமாறி விட்டன.
அட்டைகளில் ரகசிய எண்களும்
ரகசிய ஒப்பந்தங்களும்
முடிந்து வைக்கப்பட்டு இருக்கின்றன,
எல்லா வகையான நோய்களுக்குமான
மஞ்சள் துணியில் முடிந்து வைக்கும்
நாணயம் போன்றதல்ல என்பதைப்
மெளனமாய்ப் பிரகடனப்படுத்துவது போல

*****

No comments:

Post a Comment

கதைக்கும் கதைகள்

கதைக்கும் கதைகள் எது ஒரு கதை என்பதற்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கோணம் இருக்கிறது கோணத்தை அளந்து கொண்டிருந்தால் கதை சொல்ல முடியாது ...