19 Mar 2018

வழிந்தோடும் சீழும், ஊர்ந்தோடும் பூச்சிகளும்...


வழிந்தோடும் சீழும், ஊர்ந்தோடும் பூச்சிகளும்...
புண்களின் வழியே சீழ் வழிந்தோடுவது போல இருக்கிறது
உடலெங்கும் தேடிப் பார்த்தும் புண்கள் இல்லை
பூச்சிகள் ஊர்வது போல இருக்கிறது
வீடெங்கும் தேடிப் பார்த்தும் பூச்சிகள் இல்லை
நான் உனக்கு எப்படி புரிய வைக்க முடியும்?
சொல்வதற்கான ஆதாரங்கள் என்னிடம் இல்லை
சொல்ல சொல்ல எல்லாம் பொய்களாகின்றன
உன்னை உட்கார வைத்து
உன்னிடம் பேசி
உன் நேரத்தை வீணாக்குகிறேன் என்று மட்டும்
நினைத்து விடாதே.
உன்னிடம் பேச
வழிந்தோடும் சீழ் கொஞ்சம் நிற்கலாம்
ஊர்ந்தோடும் பூச்சிகளில் ஒன்று செத்து விழலாம்.
*****

No comments:

Post a Comment

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா?

விவசாயம் செய்தால் மன அழுத்தம் போய் விடுமா? பொறியாளர்கள் பலரும் மன அழுத்தம் காரணமாக விவசாயம் நோக்கி வருவதாக வெளியாகும் செய்திகளைப் பார்க்கி...