15 Mar 2018

உல்லுலாயி கவிதைகள் - புது வகைக் கவிதை


உல்லுலாயி கவிதைகள் - புது வகைக் கவிதை
            கொஞ்சம் உல்லுலாயி கவிதைகள் எழுதலாம் என்று இருக்கிறேன். உல்லுலாயி என்பது உலகப் பொது மொழி. உல்லுலாயி என்ற சொல் புரியாதவர்கள் உலகில் இருக்க மாட்டார்கள். இதன்படி சமயத்தில் ஆங்கிலத்திலும் நான் கவிதைகள் எழுதலாம். அதுதான் உல்லுலாயி கவிதைகளின் சிறப்பு. உல்லுலாயி கவிதைகளை எந்த‍ மொழியிலும் நமக்குத் தெரிந்த மொழியில் எழுதலாம். அதாவது ஆங்கிலக் கவிதைகளைத் தமிழில் எழுதலாம். இதில் குழம்புவதற்கு எதுவுமில்லை. அது அப்படித்தான்.
            ஆங்கிலக் கவிதைகளை ஆங்கிலத்திலே எழுதினால் என்னவென்று கேட்கலாம். தமிழ் தெரியாவர்களுக்குச் சிரமமாகி விடும். ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு இன்னும் சிரமமாகி விடும்.
            உல்லுலாயி கவிதைகள் புரிந்து கொள்வதற்கு மிக எளிமையானவை. இலக்கணக் கோட்பாடுகள், இலக்கியக் கொள்கைகள் அற்றவை. அதனால் இவ்வளவு விளக்கங்கள் தேவையற்றவை.
            நாம் துவங்கி விடலாம்!
*****
கலிஜ்ஜூ
உண்மை உழைப்பு நாணயம்
அய்யே ஏன் இப்டி சுத்தி
வளைச்சுகின்னு இருக்கே
போடாங் கலீஜ்ஜூ
*****
ஞாயம்
வாய்மையே வெல்லும்
ஓட்டுக்கு ரெண்டாயிரம் ஞ்ஞ்ஞ்ஞாயம்
இருபதாயிரம் அந்ந்ந்நியாயம்
என்பார்கள்
கம்ம்ம்மிஷன்
தின்பார்கள்
*****

No comments:

Post a Comment

அன்புக்கு உள்ளேயும் அன்புக்கு அப்பாலும்

அன்பைப் புரிந்து கொள்ளும் அசாத்தியம்! அன்புக்காகத் துயருறுவதும் அன்பே துயருறுவதைப் பார்க்க ஏலாது யாருக்குப் பிடிக்கும் துயருற துயரைச...