15 Mar 2018

நம்பிக்கைப் பலூன்கள் விற்பனைக்கு...


நம்பிக்கைப் பலூன்கள் விற்பனைக்கு...
நம்பிக்கைப் பலூனை உடைத்துப் பார்ப்பதில்
அலாதிப் பிரியம் கொள்கின்றன
வாய்க்கும் சூழ்நிலைகள்
உடைந்த பலூனில் உள்ளிழுத்து
சிறு காற்றுருண்டைச் செய்து கொண்டு
அமைதியாகும் வாழ்க்கையில்
அதை உடைத்துப் பார்க்கும் ஆசைகள்
அலை போல ஆர்ப்பரிக்கின்றன
கடைசியாக கையில் இருக்கும்
இறுதி மூச்சில்
கந்தல் கோலமாய்க் கிழிந்ததற்கு
வருத்தம் ஏதுமில்லாமல்
குப்பைத் தொட்டியில்
போய் விழுகின்றன பலூன் துணுக்குகள்
உடைத்துப் பார்ப்பதற்கு
இன்னொரு பலூனை வாங்கிக் கொள்ள முடியும்
என்று நம்பிக்கை கொள்கிறது வாழ்க்கை.
*****

No comments:

Post a Comment

அலைபேசி மோசடிகளிலிருந்து விழிப்புணர்வுடன் இருக்க…

அலைபேசி மோசடிகளிலிருந்து விழிப்புணர்வுடன் இருக்க… தற்போது நீங்கள் யாருக்காவது அலைபேசி செய்தால், அலைபேசி மோசடி குறித்த விழிப்புணர்வுக் குரல...