ஒன்றுக்கு ஒரு கடி
காக்கா
கடி கடித்துக் கொடுப்பதற்கு
கொய்யாவோ,
மாங்காவோ
உன்னிடம்
இல்லை
இருப்பதெல்லாம்
ஒன்றுக்குப் பலவாய்
உறை
மூடிய சாக்லேட்டுகள்
நேசம்தான்
ஒன்றினும் குறைவாய்
கொடுக்கின்ற
பிரிய மனதுக்கு
ஒன்று
என்பது குறைவன்று
பிரியமற்ற
மனதுக்கு
கோடிகளும்
கொடுப்பதற்கன்று
*****
No comments:
Post a Comment