மெளனம் கொலை செய்யும்
உணர்வுகள்
மெய்யுமல்ல பொய்யுமல்ல
செயல்படுவதுமல்ல
செயல்படாததுமல்ல
எந்த
உணர்வில் எந்தப் பாம்பும் இருக்கலாம்
விசப்
பாம்போ
விசமற்றப்
பாம்போ
பாம்பற்ற
ஒன்றோ
தீண்டியபின்
தெரியவரும்
அடக்கியதின்,
அலட்சியப்படுத்தியதின்
விசங்கள்
என்னவென்று
உணர்வற்றவர்கள்
என்று யாரையும் சொல்லி விட முடியாது
ஒரு
கொலை செய்ய ஒரு வார்த்தை போதும்
சில
பொழுதுகளில் மெளனம் போதும்
*****
No comments:
Post a Comment