பிரமாண்ட அழிவு கிளைமாக்ஸ்
யார்
சொன்னார்கள்
தமிழ்
நிலத்தில் பாலை நிலம் இல்லையென்று
பெட்ரோ
கெமிக்கல் மண்டலம் சொன்னதா?
யார்
சொன்னார்கள்
பாலை
நிலத்தில்
வழிப்பறிக்
கள்வர்கள் இல்லையென்று
துரப்பன
நிறுவனங்கள் சொன்னதா?
யார்
சொன்னார்கள்
கடற்கோள்
பொய்யென்று
உட்புகும்
கடல்நீர் சொன்னதா?
யார்
சொன்னார்கள்
காவிரிப்படுகை
அடகு வைக்கப்படவில்லையென்று
வாக்குறுதிகள்
அளிப்பவர்களின்
வாய்கள்
வந்து வலியச் சொன்னதா?
கதை
முடிந்து விட்டது
வரலாற்றுச்
சிறப்புமிக்க திரைப்படத்தின்
பிரமாண்ட
அழிவு கிளைமாக்ஸை
கொட்டாவி
விட்டுப் பார்த்தபடியே
அகதிகளாய்
வீடடைவோம் வாருங்கள்.
*****
No comments:
Post a Comment