இருவருக்கு இடையில் எப்படி நிற்கப் போகிறாய்?
பக்கத்தில் நிற்பவரும் சரியில்லை, எதிரில்
இருப்பவரும் சரியில்லை, இரண்டுமே பிடிவாதத்தின் உச்சங்கள் என்றால் என்ன செய்வீர்கள்?
இருவருக்கும் இடையில் எப்படிச் சமாளிப்பீர்கள்?
இருவருமே டென்ஷனின் உச்சத்துக்குச் சவால் விடுபவர்கள். இருவருக்கும் இடையில் நின்று
வார்த்தைகளைப் பிரயோகிக்காமல் எப்படி இருப்பீர்கள்?
இருவரும் சம்பந்தம் இல்லாமல் கோபப்படும்
போது நெஞ்சம் சுரேர் என்று இருக்குமே. ஒருவர் தன்னை மதிப்பதில்லை என்பார். இன்னொருவர்
தன்னை அலட்சியப்படுத்துவதாகக் கூறுவார். இந்த இரண்டையும் இடையில் நிற்கும் நீங்கள்
செய்ய மாட்டீர்கள். செய்யாத ஒன்றைச் செய்ததாகக் கூறப்படுவீர்கள். இதற்கு என்ன பதில்
சொல்வது?
சிலரின் குணம் அப்படித்தான். ஒன்றும் செய்ய
முடியாது.
சிறு தவறையும் பெரியத் தவறாகக் கருதி அங்கலாய்ப்பார்கள்.
இதற்கு பதில் அளிக்க முயன்றால் அதை மிகப்பெரிய முட்டாள்தனம் என்பது போல கருதிப் பார்ப்பார்கள்.
இதுபோன்ற நிலைகளில் தன்னுடைய தவறு என்பது
போல கூறித் தப்பிப்பீர்களா? தன் நிலையை நிரூபிக்கிறேன் என்று சக்தியை வீணடிப்பீர்களா?
எவ்வகையில் பார்த்தாலும் சாமர்த்தியமாக
நடந்து கொண்டு தப்பிப்பதைப் போலப் புத்திசாலித்தனம் எதுவுமில்லை. ஒருவரிடம் நியாயத்தை
எடுத்துச் சொல்வது என்பதெல்லாம் எடுபடாது.
தனது திமிரின் உச்சம் வரை சண்டையிடுபவர்களிடம்
கடைசியில் தோல்வியை பரிசாக ஏற்றுக் கொள்வதுதான் நல்லது. இந்த விசயத்தில் தோல்வியை
ஒப்புக் கொள்ளாத வரை பக்கத்தில் நிற்பவர்களும், எதிரில் நிற்பவர்களும் சைக்கோ மாதிரி
செயல்படுவதை நிறுத்த மாட்டார்கள்.
இதில் நீங்கள் எங்கு சிக்குகிறீர்கள் என்றால்...
சூழலைக் கட்டுபாட்டில் கொண்டு வர வேண்டும் என்று நினைத்துச் சிக்குகிறீர்கள். அதற்கு
உங்களைச் சூழ்ந்தவர்கள் ஒத்துழைப்பு நிரம்பியவர்களாக இருக்க வேண்டும். எல்லாம் நவகிரகம்
போல இருந்தால் சூழலை எப்படிக் கட்டுக்குள் கொண்டு வர முடியும்? நீங்கள் நினைப்பது
போல எப்படிச் செய்ய முடியும்?
ஆனால் ஏதாவது செய்தாக வேண்டும் என்றுதான்
தோன்றுகிறது அல்லவா! அதுதான் தவறு. எதையும் செய்யாமல் கவனியுங்கள். தப்பித்துக் கொள்வீர்கள்.
இல்லையென்றால் மாட்டிக் கொள்வீர்கள்.
ஏனென்றால் பக்கத்தில் நிற்பவர்க்கும்,
எதிரில் இருப்பவர்க்கும் எப்போதும் பஞ்சாயத்து செய்யாதீர்கள். ஒருவர் மொழுக்குக்
குத்து போடுவார் என்றால், இன்னொருவர் கண்களைக் குத்தி விடுவார்.
வாழ்க்கையின் உள்ளார்ந்த உறவு மற்றும்
நட்பு சார்ந்த பெரும்பான்மையான விசயங்களுக்கு இது பொருந்தும். பங்கேற்பதால் மாட்டிக்
கொள்வது அதிகம். கவனிப்பதோடு நிறுத்திக் கொண்டால் எந்தப் பிரச்சனையும் ஏற்படப் போவதில்லை.
இருவரும் வேண்டியப்பட்டவர் எனும் நிலையில்
பேச்சு, செயல் எல்லாமும் கவனிப்பது என்ற அளவில் நின்று விட்டால் எந்தப் பிரச்சனையும்
ஏற்படாது. சொற்குற்றமோ, பொருட்குற்றமோ எதுவும் ஏற்படாது. கலந்து கொள்ள வேண்டும்
என்று நினைப்பது அந்த நேரத்து ஆசையின் வெளிப்பாடு. அந்த ஆசை பெருத்த ஆபத்தில் கொண்டு
போய் விட்டு விடும்.
ஒருவருக்கு எதிரியாகலாம். இருவருக்கும்
எதிரியாக வேண்டும் என்றால் நீங்கள் தாராளமாகச் சமாதானம் செய்யலாம். இதையும் மீறி சமாதானம்
செய்வது உங்களுக்குப் பிடிக்கிறது என்றால் சமாதானம் செய்து வைப்பதைப் போல நடியுங்கள்.
உண்மையான சமாதானத்தைச் செய்து விடாதீர்கள். அதன்பின் இருவருக்கும் எதிரியாகும் துர்பாக்கிய
நிலையை எதிர்கொள்வது உங்கள் விருப்பம்.
*****
No comments:
Post a Comment