1 Mar 2018

காலப் புதிர் வெளிகளின் தண்டனைகள்

காலப் புதிர் வெளிகளின் தண்டனைகள்
உங்கள் தண்டனைகளில்
மன்னிப்பைக் கொருவதோ
உங்கள் வெகுமதிகளில்
அன்பினைக் கொருவதோ
இரண்டும் ஒன்று
உங்களுக்கு அது சடங்கு
எங்களுக்கு அது விலங்கு
அவ்வாறு நாங்கள் கோராது போனால்
வன்மமாய் வார்த்தைகளால் மிதிப்பீர்கள்
சாதிப்பெயர்ச் சொல்லிச் சிரிப்பீர்கள்
தண்டனைகளைப் பெருந்தன்மையாய்
நாங்களாகவே ஏற்றுக் கொள்வதற்கு
எப்படியெல்லாம் நிர்பந்திக்கிறீர்கள்?
அடிமைத்தனமே ஒரு தண்டனை எனும் போது
அடிமைக்கு என்ன அதற்கு மேல் தண்டனை?
எதற்கும் எச்சரிக்கையாய் இருங்கள்
அடிமைப்படுத்தியதற்கான தண்டனை ஒன்று
காலப் புதிர் வெளியில்
அறச்சீற்றம் எனும் ஊர்தி ஏறி
வந்து கொண்டிருக்கிறது கனவான்களே!

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...