25 Feb 2018

அசைக்க முடியாத வீடு

அசைக்க முடியாத வீடு
நானிருக்கும் வீட்டை விட்டு
யாரும் என்னை விரட்ட முடியாது
வாடகைக் கேட்டு மிரட்ட முடியாது
உள்ளிருக்கும் பொருட்களை அள்ளி
வெளியே வீச முடியாது
கிரயப் பத்திரம் மாற்றி
வேறொருவர் பெயரில் பதிவு செய்ய முடியாது
நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கென
இடிக்க முடியாது
ஆக்கிரமிப்பில் இருக்கிறதென
நோட்டீஸ் கொடுக்க முடியாது
ஒரு ஊரே அழிந்த
பாழடைந்த வீட்டில் இருக்கிறேன்
உங்கள் சட்ட திட்டங்கள்
இங்கு செல்லாது
மற்றொரு ஊரை அழிக்கும்
துரப்பனத் திட்டத்தோடு
உங்கள் தஸ்தாவேஜூக்களைத்
தூக்கிக் கொண்டு செல்லுங்கள்

*****

No comments:

Post a Comment

அவனவன் கிரகம்!

அவனவன் கிரகம்! இந்த ஜோதிடர்கள் ஒவ்வொருவரும் எம்எஸ், எம்டி டாக்டர்களைத் தாண்டி சம்பாதிக்கிறார்கள். ஜோதிடர் ஆவதற்கான நீட் தேர்வு குறித்து அற...