18 Feb 2018

வெயிலைத் திட்ட ஆரம்பித்தோம்

வெயிலைத் திட்ட ஆரம்பித்தோம்
அடித்துத் துவைத்துக்
காய போட்ட பிறகும்
சிறுபிள்ளை போல் பேசினாய்
மழலைகளை அடிக்க
எப்படி மனம் வருகிறது என்று
யாரும் கேட்க முடியவில்லை
குடித்து விட்டு தள்ளாடி தள்ளாடி
முன் திண்ணையில் சுருண்டு கிடக்கும்
உன் கணவனுக்கு எடுத்துச் சொல்லும் பக்குவம்
எங்களுக்கு இல்லை என்று
நாங்கள் அங்கலாய்த்துக் கொண்டோம்
விடியாத இரவு விடிந்து
காலையில் எழுந்தவனை
சிறுபிள்ளையாக்கி பணிவிடைகள்
செய்வதைப் பார்த்து
நேற்றிரவு நீ சிறுபிள்ளையாய் அழுத
அடர்ந்த கருமையை நீக்க முடியாத
வெயிலைத் திட்ட ஆரம்பித்தோம்

*****

No comments:

Post a Comment

இருக்கும் போதும்… இல்லாத போதும்…

இருக்கும் போதும்… இல்லாத போதும்… சம்பாதிக்கும் காலத்தில் ஆயிரம் ரெண்டாயிரம் என்று கடன் கொடுக்க ஆயிரம் பேர் ஐயா கடன் வேண்டுமா என்று அ...