குறளதிகாரம் - 6.2 - விகடபாரதி
குடும்ப குத்து
விளக்கே! வாழ்க்கையின் கெத்தே!
மனைக்கான
அழகு மனைவி.
அவளே மனையை
மாட்சி செய்கிறாள்.
தன் மனத்தால்,
தன் குணத்தால்,
தன் அன்பால்,
தன் பண்பால்,
தன் ஆளுமையால்,
தன் மேன்மையால்,
தன் நிர்வாகத்தால்,
தன் சமயோசிதத்தால்
மனையை மாட்சி
செய்வதாலும்,ஆட்சி செய்பதாலும்தான் அவள் மனைவி ஆகிறாள். மனையின் தலைவி மனைவி என்று
ஆகிறாள்.
பூக்கள் இல்லாத
பூந்தோட்டம் எப்படியோ,
நட்சத்திரங்கள்
இல்லாத இரவு வானம் எப்படியோ,
கண்கள் இல்லாத
முகம் எப்படியோ,
மனைவி இல்லாத
அகம் அப்படியே.
தங்கப் பதக்கத்தில்
முத்து பதித்தது போல இல்லத்தை ஒளி வெள்ளமாக மாற்றுபவர்கள் அவர்களே.
ஓர் ஆண் கல்வி
கற்றால் அது அவனோடு முடிகிறது, ஒரு பெண் கல்வி கற்றால் ஒரு தலைமுறையே விடிகிறது என்று
நேரு அவர்கள் குறிப்பிட்டாரே - அப்படி ஒரு தலைமுறையின் விடியல், ஒரு குடும்பத்தின்
விடியல் அதாவது குடும்பத்தின் கிழக்கு பெண்.
பாவேந்தர்
பாரதிதாசன் அவர்கள் இதை மிக அழகாக குடும்ப விளக்கு என மேன்மைபடுத்துவார்.
தலைமுறை விடியலில்
குடும்பத்தின் கிழக்காக, வரைமுறை வாழ்க்கையில் குடும்பத்தின் விளக்காக விளங்குபவள்
மனைமாட்சி செய்யும் மனைவி.
குடும்பத்தின்
விளக்கான அவள் ஒளி தர மறந்தால் அது இருண்ட வீடு என்பதை பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள்
இலக்கியமாகவே பாடி நிறுவியிருக்கிறார்.
குடும்பம்
குத்து விளக்காக வெளிச்சம் பொங்குவதும்,
குடும்பம்
இருண்ட காடாக மங்குவதும் மனையாளின் கையிலே, அவளது மாட்சியிலே, அவள் புரியும் குடும்ப
ஆட்சியிலே இருக்கிறது.
மனையாளின்
சிறப்பே மனையின் மங்காத சிறப்பு. அவள் மூலம் வராத சிறப்பு எதுவும் வெற்றுப் பருப்பு.
அவளின் மாட்சி
மனையில் விளங்கினால் மனையில் இல்லாதது ஏது? அவளின் மாட்சி மனையில் விளங்கா விட்டால்
இருப்பதுதான் ஏது?
மனையாளின்
ஆட்சி மனையின் மங்கல மாட்சி.
மனை மாட்சி
இல்லாள் கண் இல்லாயின் வாழ்க்கை எனை மாட்சித்து ஆயினும் இல் என்கிறார் வள்ளுவர்.
குடும்ப குத்து
விளக்கு பெண், அவளை அடையப் பெற்றால்தான் வாழ்க்கை கெத்து என்று சமீபத்திய திரைப்பாடல்
வரை வள்ளுவரின் கருத்தைத்தான் வழி மொழிந்து வருகிறது.
*****
No comments:
Post a Comment