9 Feb 2018

வரலாற்றுச் சுருக்கம்

வரலாற்றுச் சுருக்கம்
குரூரம் கொலையில் முடிகிறது
பதவிகள் ரத்தத்தில் எழுதப்படுகின்றன
பரம்பரை ஆதிக்கம் குறித்த கேள்விகள்
மரணம் தீண்டும் அச்சத்தில்
மெளனமாக்கப்படுகின்றன
மெயின் ரோட்டில் வைத்து வெட்டுவார்கள்
கூலிப்படை என்ற தனிப்படை உண்டு
நீ செத்து இருபது ஆண்டுகளுக்குப் பின்
உனக்கான நீதி கிடைக்கும்
அவரவர் சாவைத் தள்ளிப் போடும்
சித்திரகுப்தனின் ஏடு ஏதேனும்
உன்னிடம் இருக்கிறதா தோழனே!

*****

No comments:

Post a Comment