விரும்பிய இந்த வாழ்வு
உலவும் பத்துப்
பாம்புகளில்
ஒன்றை விரும்பத்தான்
வேண்டும்
விசமில்லாத
பாம்பாகப் பார்த்து
விரும்புவது
உங்கள் சாமர்த்தியம்
விசமுள்ள பாம்பும்
வீரியமாக
கொத்தி விடாது
என்றாலும்
கொத்தி விடுவது
போல காட்டும் போக்கில்
கனவிலும் கற்பனையிலும்
அச்சத்திலும்
நூறு முறை
கொத்துப்பட்டு விடுவீர்கள்
பாம்புகளோடு
வாழப் பிடிக்கவில்லையென்றால்
தேள்களோடு
வாழப் பழகுங்கள்
பழகியப் பாம்புகளே
பரவாயில்லை என்று
முடிவெடுப்பது
பற்றி மறுபடியும் சொல்வதானால்
அது உங்கள்
சாமர்த்தியம்
உங்களுக்குப்
பிடிக்காத ஜந்துவோடு
பித்தது போல
வாழப் பழகிக் கொள்வதைத் தவிர
அநேகமாக உங்களுக்கு
வேறு மார்க்கமில்லை
நட்டுவாக்காலிகளையும்
ஒரு முறை பாருங்கள்
ஒருவேளை உங்களுக்குப்
பிடித்துப் போகலாம்
பிடிக்காமல்
போனாலென்ன பாம்புகள் இருக்கின்றன
*****
நன்றி - ஆனந்த விகடன் - இதழ் 07.02.2018 - பக்கம் 94
No comments:
Post a Comment