22 Feb 2018

ஏமாற்றம் பிறந்ததற்கு ஸ்வீட் எடுத்துக் கொள்ளுங்கள்!

ஏமாற்றம் பிறந்ததற்கு ஸ்வீட் எடுத்துக் கொள்ளுங்கள்!
இதோ மறுபடியும்
ஏமாற்றம் பிறந்திருக்கிறது
ஸ்வீட் எடுத்துக் கொள்ளுங்கள்
அடுத்த முறை நம்பிக்கை பிறக்கும்
அதற்காக இப்போது பிறந்திருக்கும்
ஏமாற்றத்தைக் கொண்டாடாமல் விடுவதா
நம்பிக்கைப் பொய்க்கும்
ஏமாற்றம் பொய்க்குமா
நம்பிக்கையைப் போல
ஏமாற்றம் எப்போதும் துரோகம் பண்ணாது
அதற்காகவேனும் ஏமாற்றத்தைக் கொண்டாடுங்கள்
மிக மோசமானப் பரிசைக்
கொடுக்க நினைத்தவன் ஏமாந்து நிற்கட்டும்
அவனுக்கும் சேர்த்து ஏமாற்றத்தைக் கொண்டாடுவோம்
*****

நன்றி - ஆனந்த விகடன் - இதழ் 21.02.2018 - பக்கம் 94

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...