22 Feb 2018

புதிய பரிசாரகன்

புதிய பரிசாரகன்
இந்த உலகில்
உழைத்துப் பணம் சேர்த்தால்
எதையும் வாங்க முடியும் என்பவர் அவர்
தூக்கத்தைத் தரும்
இரத்தக் கொதிப்பை அடக்கும்
சர்க்கரையைக் குறைக்கும்
வாயுவை நிறுத்தும்
மாத்திரைகள் எதுவும் கிடைக்காது என்று
கேள்விப்பட்ட பிறகு
கிடைக்காதப் பொருளை வாங்குவதற்கு
எதற்கு உழைக்க வேண்டும் என்று
உழைப்பதை நிறுத்திக் கொண்டார்
தூக்கம் வந்தது
இரத்தக் கொதிப்பு அடங்கியது
சர்க்கரைக் குறைந்தது
வாயுத் தொல்லை நின்றது
முதல் வேலையாக
சுய முன்னேற்ற நூல்களைக் கிழித்தெறிந்தவர்
இரண்டாவது வேலையாக
உழைப்பதை நிறுத்துங்கள் என்று
பிரச்சாரம் செய்யத் தொடங்கினார்
பணமின்றி வாங்கக் கூடிய பொருள்கள்
உலகில் நிறைய உண்டென்ற
ரெளத்திரப் புன்னகையோடு

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...