11 Feb 2018

சுவரில் அறையும் உண்மைகள்

சுவரில் அறையும் உண்மைகள்
கட்டிடத்தின் முதல் அறையில்
நிர்வாணச் சிற்பங்கள் இருந்தன
இரண்டாவது அறையில்
கனத்த பூட்டுத் தொங்கியது
மூன்றாவது அறையில்
மலர்களும் அத்தர்களுமாக
வாசனை இடுக்குகளின் வழியே
கசிந்து கொண்டிருந்தது
நான்காவது அறையிலிருந்து
குறட்டைச் சத்தம்
ஐந்தாவது அறைக்குப் பாய்ந்து கொண்டிருந்தது
ஆறாவது அறை குளியலறை
ஏழாவது அறை கழிவறை
கடைசி அறையைக் காணவில்லை
ஏராளமான அடிமைகள் அதில்
அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர்

*****

No comments:

Post a Comment

அரிசி எந்தக் கடையில் விளைகிறது?

அரிசி எந்தக் கடையில் விளைகிறது? காளையரின் வியர்வை சிந்தி காளைகளின் சாணமும் கோமியமும் விழ ஏர் உழுத நிலத்தை டிராக்டர் கார்பன் புகை உமி...