19 Feb 2018

தோட்டாக்களின் கணக்குகள்

தோட்டாக்களின் கணக்குகள்
நதியும் கடலும் சேரும் இடத்தில் வாழும்
மீன்கள் பாக்கியவான்கள்
மசூதியும் கோயிலும் பக்கத்தே இருக்க
இரண்டிலும் படபடக்கும்
புறாக்கள் புண்ணியவான்கள்
இரு கால்களுக்கு இடையே செல்லும்
அந்நிய தேசத்தின் எல்லைகள்
பாவாத்மாக்களின் பட்டியலில்
நம்மை சேர்த்துக் கொண்டிருக்கின்றன
துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு ஓட
நாம் பயிற்றுவிக்கப்பட்டு இருக்கிறோம்
யாரைச் சுட வேண்டும் என்ற
ரகசியக் கட்டளைகள் அந்த நேரத்தில் வழங்கப்படும்
உங்களை நீங்களே சுட்டுக் கொள்வதற்கான
கட்டளைகளும் காகிதத்தில் தரப்படலாம்
எதிரிகள் உங்களைச் சுட்டதாகக் கணக்குக் காட்டப்படலாம்

*****

No comments:

Post a Comment

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா?

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா? பழங்களையல்ல வேர்களைக் கவனியுங்கள் பழங்கள் கண்ணுக்குத் தெரிகின்றன வேர்கள் மறைந்திருக்கின்றன பழ...