13 Feb 2018

கடைசி என்பதன் பொருள் கடைசி என்பதன்று

கடைசி என்பதன் பொருள் கடைசி என்பதன்று
கடைசியாக ஒருமுறை
குடித்துக் கொள்கிறேன் என்றவன்
மறுநாளும் குடித்துக் கொண்டிருந்தான்
நேற்றைய கடைசி என்னவானது
என்று கேட்டவனை
முகத்தில் அறைந்து
கடைசி என்பது இல்லவே இல்லை
கடைசியைக் காட்டினால்
தான் நிறுத்தி விடுவதாக சத்தமிட்டான்
இன்றை ஆறுதல்படுத்த
மீண்டும் அவன்
கடைசியாக ஒருமுறை என்பதைப்
பயன்படுத்துவான்
அது குறித்து பொருட்படுத்த வேண்டியதில்லை
கடைசி என்பதன் பொருள்
கால ஓட்டத்தில் மாறிப் போனது
அகராதிகளுக்குத் தெரியாமல் இருக்கலாம்
கடைசி என்பதன் பொருள் கடைசி என்பதன்று

*****

No comments:

Post a Comment

அன்புக்கு உள்ளேயும் அன்புக்கு அப்பாலும்

அன்பைப் புரிந்து கொள்ளும் அசாத்தியம்! அன்புக்காகத் துயருறுவதும் அன்பே துயருறுவதைப் பார்க்க ஏலாது யாருக்குப் பிடிக்கும் துயருற துயரைச...