24 Feb 2018

பூமியெனும் பொல்லா கிரகம்

பூமியெனும் பொல்லா கிரகம்
வாக்குறுதிகளை ரயில் தண்டவாளங்களில்
படுக்க வை
நம்பிக்கையை லாரியேற்றிக் கொலை செய்
எஞ்சியிருக்கும் காதலை
வங்கக் கடலில் கரைத்து விட்டுப் போ
சாதிக்குள் சாதி மணம் செய்து
கூண்டுக்குள் வாழும் சிங்கமாய்ச் செத்துப் போ
உன் மூளை துரு பிடித்த
அரிவாள்களைப் போல் ஆகட்டும்
உன் புத்தி சாய நீர் கலந்த
நதி போல் போகட்டும்
மனுசனை மனுஷி நேசிக்க முடியாத
பொல்லா கிரகம் என
பூமி பெயர் கொள்ளட்டும்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...