பழஞ்சீலைக்காரன்
வீட்டுக்கு
வீடு ஆடைகளைச் சேகரித்து
தெருவில்
ஒருவன் உலவுகிறான்
நேர்த்தியாக
மடிக்கப்பட்ட ஆடைகளை விரித்து
ஒரு
பந்து போல் சுருட்டி கக்கத்தில்
வைத்துக்
கொள்கிறான்
பிடித்தவைகளைப்
போட்டுக் கொள்கிறான்
பிடிக்காதவைகளை
ஆற்றிலோ குளத்திலோ
எறிந்து
விடுகிறான்
மூன்று
மாதத்துக்கு ஒரு முறை என்று
முறை
வைத்துக் கொள்கிறான்
அவன்
கேட்பது பழைய ஆடைகள்
வீடுகளில்
இருப்பவர்களின் ஆடைகள்
பழையதாகி
இருக்க வேண்டும்
பழையதுதான்
என்பதை அவர்களின்
மனம்
தீர்மானிக்க வேண்டும்
பல
வீடுகளில் விரட்டப்படுபவன்
ஒரு
சில வீடுகளில் ஆடைகளோடு திரும்புகிறான்
புத்தாடை
அணிபவர் முகத்தில்
காணும்
மகிழ்வைத் தாண்டி
பரவசம்
தாண்டமாடும் அவன் முகத்தில்
தனக்குப்
பிடிக்காத ஆடையைத்
தூக்கி
எறியும் தைரியம் இருக்கிறது
அத்துடன்
தனக்குப் பிடிக்காத வாழ்க்கையையும்.
*****
No comments:
Post a Comment