21 Feb 2018

நம்பிக்கையைக் கொன்ற இரவு

நம்பிக்கையைக் கொன்ற இரவு
ஒவ்வொரு மெழுகுவர்த்தியாய்
அணைந்து கொண்டு வர
இருள் கவ்வுகிறது
தான் ஏற்றி வைத்தது
நம்பிக்கையை என்று
அவள் புலம்பிக் கொண்டிருக்கிறாள்
மெழுகுவர்த்திகளின் பரிதாபக் கண்ணீரை
முடிவுக்குக் கொண்டு வந்து விட்டதாக
இருள் சொல்கிறது
கனவுகள் இல்லாத உறக்கத்தை
இரவைத் தழுவியபடி
உறங்கத் தொடங்குகிறாள்
நம்பிக்கையைக் கொன்ற இரவுக்கு
நன்றி சொல்லியபடி

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...