21 Feb 2018

காகமும் நரியும்

காகமும் நரியும்
கார்ப்பரேசன் குழாயிலிருந்து
பெருத்த ஒலியோடு
வறண்ட காற்று ஊற்றிக் கொண்டிருக்கிறது
ஏமாந்துப் போகும் காகத்தை
பரிகாசம் செய்தபடி
வாட்டர் பாட்டிலைப்
பருகிக் கொண்டிருக்கிறது நரி
வடை சுட்ட பாட்டி
விற்றுக் கொண்டிருக்கும்
வாட்டர் பாட்டிலில்
ஒன்றைக் காணவில்லை என்று
தேடிக் கொண்டிருக்கிறாள்
நாக்கு உலர்ந்த காகம்
கா கா எனக் கத்திப் பார்க்கிறது
பாஷைப் புரிவேனா என்கிறது பாட்டிக்கு.

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...