26 Feb 2018

பள்ளியில் சேர்ந்த ஐவர்

பள்ளியில் சேர்ந்த ஐவர்
அந்த ஐந்துப் பிள்ளைகளில்
ஒருவன் அரசுப் பள்ளியில் சேர்க்கப்பட்டான்
ஒருவன் தனியார்ப் பள்ளியில் சேர்க்கப்பட்டான்
ஒருவன் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டான்
ஒருவன் மத்தியப் பாடத்திட்டமுள்ள பள்ளியில் சேர்க்கப்பட்டான்
ஒருவன் சர்வதேப் பாடத்திட்டமுள்ள பள்ளியில் சேர்க்கப்பட்டான்
எந்த வேலையும் கிடைக்காமல்
சுய தொழில் செய்து கொண்டிருந்த அவர்கள்
இருபது வருடங்கள் கழித்து
ஒரு நாள் சந்தித்த போது
பாடத்திட்டங்கள் இல்லாத ஒரு பள்ளியில்
தங்கள் பிள்ளைகளைச் சேர்ப்பது குறித்து
விவாதித்துக் கொண்டிருந்தனர்

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...