14 Feb 2018

நல்ல விலை போகும் இதயம்

ஆதி
நீ முத்தத்தோடு முடித்துக் கொண்டாய்
அங்குதான் தொடங்கியது எனக்கு
*****

நல்ல விலை போகும் இதயம்
வறண்ட நீருற்றுப் போல ஆகி விட்டது இதயம்
ஆற்றில் நீர் வந்தால்
மழை பெய்தால்
ஊற்றுப் பிடித்துக் கொள்ளும் என்று
பேசிக் கொள்கிறார்கள்
பேசுபவர்கள் பேசட்டும்
மழை வரும் அறிகுறியில்லை
ஆற்றில் நீர் திறக்கும் வாய்ப்பில்லை
நீருற்று அடைபட்டு விட்டால்
பெட்ரோலியம் பீறிட்டுக் கொள்ளும்
பன்னாட்டுச் சந்தையில்
நல்ல விலை போகும் இதயம்
கசிவதற்குக் கூட நீரில்லாமல்
கண்களில் எரிந்து கொண்டிருக்கும்
கச்சடா எண்ணெயை வெளியே
எடுப்பதற்கான ஜூவாலை

*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...