23 Feb 2018

அழைப்பு எண்ணின் நன்றி

அழைப்பு எண்ணின் நன்றி
தொடர்பு கொள்ள முடியாத
இடத்தில் இருப்பதாக சொல்கிறது
உனக்கான அழைப்பு எண்
அந்த அழைப்பு எண்ணை
ஒரு முறை சரிபார்க்கிறேன்
கெஞ்சுகிறேன் அதனிடம்
ஒரு முத்தம் தருகிறேன்
மிகுந்த கவனத்தோடு
மனப்பாடம் செய்து கொண்டு
ஒவ்வொரு எண்ணாக
அழுத்திப் பார்க்கிறேன்
மீண்டும் தொடர்பு கொள்ள முடியாத
என்ற வார்த்தையையே
திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறது
தொலைந்து விட்ட உனக்காக
 அந்த எண் போராடுகிறது
அந்த எண் மீது இரக்கம் சுரக்கிறது
ஆறுதலாய் அணைத்துக் கொள்ளத் தோன்றுகிறது
சில மணி நேரங்களில்
அந்த எண்ணிலிருந்து தொடர்பு கொள்கிறாய் நீ
அதற்கு நன்றி சொல்கிறேன்
தொடர்பற்ற காலவெளியில்
திட்டாமல் இருந்ததற்கு நன்றி என்கிறது
அந்த அழைப்பு எண்

*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...