20 Feb 2018

ரத்தம் சொட்டும் கண்கள்

ரத்தம் சொட்டும் கண்கள்
அமைதியைத் வெறிக்க வைக்கும்
வார்த்தைகள்
இரத்தமாய்த் தெறிக்கலாம்
இரத்தக் கவிச்சி
பீதிகளையும் வதந்திகளையும்
நாற்சந்திலும் பரப்பி
மூத்திரச் சந்தில் ஒதுங்கி
ஒரு மதுப்புட்டியில்
உறக்கம் கலைக்கலாம்
சில நாள்களில் வன்முறைகள் வேண்டாம்
சமாதானமே நல்லது என
தடையுத்தரவில் வளைக்கப்பட்டு
முடிந்து விடலாம்
முடித்து வைக்கப் படலாம்
சிந்திய ரத்தம் உடலுக்குச் செல்லாது
ஆறாத ரணமாய்
வடுவான மனிதத்தின் கண்களிலிருந்து
சொட்டிக் கொண்டிருக்கும்
ரத்தத்தைப் பிடித்து
தாகம் தணிப்பவர்கள்
காலிக் குடங்களோடு
வந்து கொண்டிருப்பார்கள்

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...