2 Feb 2018

எழுதுதலின் உச்ச கட்டம்

எழுதுதலின் உச்ச கட்டம்
எழுதுவதன் மேல் பெரும் போதை
கவிதையோ கட்டுரையோ கதையோ அல்ல
அழகாக எழுதுவதன் காமம்
வளைவு நெளிவுகளில்
கவர்ச்சி காணும் வேட்கை
எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்
பக்கம் பக்கமாக
சில மணித்துளிகளில் வீழ்ந்து விடும்
உச்ச கட்ட இன்பம் போலல்லாமல்
நீண்டு கொண்டே இருக்க வேண்டும்
நெளிவும் சுளிவும் வளைவுகளும்
அதில் பொருந்தும் கோடுகளும் கொம்புகளும்.

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...