17 Feb 2018

தண்டனை எண்கள்

தண்டனை எண்கள்
ஆண்பிள்ளைகளின் சட்டையை
அணிந்தாளென்று அவளுக்கு
முதல் தண்டனை வழங்கப்பட்டது
ஆண்பிள்ளைகளோடு
சரிக்குச் சரிமமாய் நிற்கிறாளென்று
இரண்டாம் தண்டனைத் தரப்பட்டது
ஆண்பிள்ளைகளை எதிர்த்துப் பேசுகிறாளென்று
மூன்றாம் தண்டனை நிறைவேற்றப்பட்டது
ஆண்பிள்ளைகளுக்கு அடிபணியவில்லை என்று
நான்காம் தண்டனை கொடுக்கப்பட்டது
ஆண்பிள்ளைகள் வரும் போது
எழுந்து நிற்கவில்லையென்று
ஐந்தாம் தண்டனை வாசிக்கப்பட்டது
அதற்கு மேலும் அவளை விடக் கூடாது
ஆண்பிள்ளைகளுக்குக் கீழே வைக்க வேண்டுமென்று
ஆறாம் தண்டனையாக தாலி கட்டப்பட்டது
ஏழாம், எட்டாம்,... தண்டனைகளுக்கு
அவசியமில்லாமல் போய் விட்டது.

*****

No comments:

Post a Comment

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை!

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை! தற்காலத்தில் இலவசப் பரிந்துரைகள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் அதிகம் உலவுகின்றன. இலவசங்களுக்கும், இல...