16 Feb 2018

அன்பின் பிசுபிசுப்பு

அன்பின் பிசுபிசுப்பு
மூடிய உள்ளங்கையில் இருக்கும்
ஆரஞ்சு மிட்டாய்கள் உனக்காக
அடம் பிடித்து அழுது
பிசுபிசுத்துக் கொண்டிருக்கிறது
உன் நாவில் கரையப் போகும்
பொழுது நீண்டு போய்
நீ வருவதற்கு நேரமாகிறது என்பதாக.
*****

புனைவின் வியப்பு நனைவின் பயம்
உன் கூந்தல் கருநாகம் என்று
கவிதை வடித்தவர்
எவ்வளவு தைரியசாலி
முதன் முதலில் கருநாகத்தைப்
பார்த்த போது
பயமாக இருந்தது.

*****

2 comments:

  1. காதலாகி கசிந்துருகி...

    ReplyDelete
    Replies
    1. நன்றியாகி நெகிழ்வாகிறேன் ஐயா!

      Delete

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை!

இலவசப் பரிந்துரைகள் உலகில் இல்லை! தற்காலத்தில் இலவசப் பரிந்துரைகள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் அதிகம் உலவுகின்றன. இலவசங்களுக்கும், இல...