15 Feb 2018

காலத் தீக்குச்சி

காலத் தீக்குச்சி
கெஞ்சிய கைகளை முடிச்சிட்ட பிறகு
மண்டியிட்ட கால்களை திருகி விட்ட பிறகு
பணிவோடு வணங்கிய
முதுகெலும்பை உருவிப் போட்ட பிறகு
உணவென சதைகளை படையலிட்டும்
சதைகளை பிய்த்தெறிந்த பிறகு
நிறம் பிடிக்கவில்லையென
தோலை உரித்து எடுத்து பிறகு
நல்ல விலை போகும் என்று
உறுப்புகள் ஒவ்வொன்றையும்
கண்டம் துண்டமாக வெட்டிய பிறகு
உடலில் ஒட்டியிருந்த உயிருக்கு
பிச்சைக் காசைத் தூக்கியெறிந்த பிறகு
இனி எதுவும் பொறுப்பதில்லையென
இப்படித்தான் எழுதப்படுகின்றன
யுகத்தைச் சுட்டெரிக்கும் புரட்சிக் கவிதைகள்
சூரியனை உரசி விட்ட
காலத் தீக்குச்சியைப் போல.

*****

No comments:

Post a Comment

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி!

கொடுப்பதில் இருக்கும் சூட்சமம் – ஓளவை கூறும் ஈகை மொழி! கொடுப்பதென்றால் இப்போதே கொடுத்து விட வேண்டும். நாளை என்று நாள் கடத்தக் கூடாது. நா...