7 Feb 2018

வார்த்தைத் துளிகள்

வார்த்தைத் துளிகள்
பனித்துளியை
நக்கி நக்கி ருசித்தவன்
ஒரு வாட்டர் பாக்கெட்
வாங்க இயலாத இயலாமையை
கண்ணீர் துளிகளோடு
சொல்லிக் கொண்டிருந்தான்.
சுட்டெரித்த சூரியன்
கொப்புளிக்க வைத்த
வியர்வைத் துளிகளைத் துடைத்தபடி
தன் தாகம் தீர்ப்பதற்கான
வழி கிடைத்து விட்டதாக
பஞ்சடைத்த கண்களின் வழியே
உறிஞ்சிக் கொண்டிருந்தான்
அந்த வார்த்தைகளை உற்றுக் கேட்டவன்.

*****

No comments:

Post a Comment