12 Feb 2018

சிறுமை கலைவதாக!

சிறுமை கலைவதாக!
மெளனத்தைக் கொல்ல முடியாது
பேசித் தொலையுங்கள்
ரகசியங்களை செரிக்க முடியாது
துப்பித் தொலையுங்கள்
குமுறலை அடக்க முடியாது
தும்மித் தொலையுங்கள்
கோபங்களைப் புதைக்க முடியாது
சபித்து விடுங்கள்
இப்படியெல்லாம் நீங்கள் செய்திருந்தால்
எந்த வீடும்
எந்த நாடும்
எந்தச் சமூகமும்
எந்த இனமும்
எந்த மனிதனும்
யாருக்கும் அடிமைபட்டிருக்க முடியாது.

*****

No comments:

Post a Comment

அன்புக்கு உள்ளேயும் அன்புக்கு அப்பாலும்

அன்பைப் புரிந்து கொள்ளும் அசாத்தியம்! அன்புக்காகத் துயருறுவதும் அன்பே துயருறுவதைப் பார்க்க ஏலாது யாருக்குப் பிடிக்கும் துயருற துயரைச...